கால் கொலுசை அடகு வைத்து குடித்த கணவனுக்கு மனைவி கொடுத்த நுாதன தண்டனையால் பரபரப்பு.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி
fire man - 2026

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(வயது 36). கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி சித்ரா(33). இவர்களுக்கு வெற்றிவேல்(12), ஹரிஷ்(10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

செந்தில் தீவிரமான மதுபழக்கத்திற்கு அடிமையானவா் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மனைவியிடம் அவசர செலவுக்காக சித்ராவின் கால் கொலுசை வாங்கி அங்குள்ள கடையில் ரூ.2 ஆயிரத்துக்கு அடகு வைத்தார்.

அந்த பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் மதுவாங்கி மதுவாங்கி குடித்து செலவு செய்து விட்டார்.

இந்த விவரம் சித்ராவுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கணவரிடம் தகராறு செய்துள்ளார்.

செந்தில் பதிலுக்க மனவைி சித்ராவை கொடூரமாக தாக்கிவிட்டு போதையில் அசந்து துாங்கி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்ரா இரவு வீட்டு முன்பு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்து வந்தார்.

பின்னர் உள்ளே இருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல்போட்டு அலறினார்.

செந்தில் போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரது நிலைமை மோசமாக உள்ளது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து தலைமறைவாகிவிட்ட சித்ராவை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.