போலீசாரின் பூட்சுகளை பாலிஷ் செய்து முத்தமிட்ட ஒய்சிபி எம்பி.,!

இந்தியா லைஃப் ஸ்டைல்
IMG 20191222 WA0011 - 2026

போலீசாரின் பூட்சுகளை பாலிஷ் செய்து முத்தமிட்ட ஒய்சிபி எம்பி.

தெலுங்குதேசம் முன்னாள் எம்பி ஜேசி திவாகர் ரெட்டி போலீசார் பற்றி பேசிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்சிபி எம்பி ‘கோரண்ட்ல’ மாதவ் போலிசாரின் பூட்சுகளை துடைத்து முத்தமிட்டார்.

முன்னாள் தெலுங்கு தேசம் எம்பி ஜேசி திவாகர் ரெட்டி “போலீசாரைக் கொண்டு என் பூட்சுகளையும் நக்க வைப்பேன்” என்று பேசிய பேச்சுக்கு வினோதமாக எதிர்ப்பு தெரிவித்தார் ஒய்சிபி எம்பி.

செய்தியாளர்கள் எதிரில் போலிசாரின் பூட்சுகளுக்கு பாலிஷ் போட்டு அவற்றுக்கு முத்தம் கொடுத்தார். இவ்வாறு செய்வதில் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

நாட்டைக் காப்பதில் உயிரைக் கொடுத்து போராடும் போலீசாரை புகழ்ந்து பேசினார். ஜேசி திவாகர் ரெட்டியின் தரக்குறைவான பேச்சு குறித்து ஆத்திரமடைந்தார்.

தாய் ஜென்மம் அளிக்கிறாள்…. பாதுகாப்பாக இருக்கும் போலீசார் புனர் ஜென்மம் அளிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் கோரண்ட்ல மாதவ்.

போலீசாரை என்ன பேசினாலும் பேசாமல் இருப்பார்கள் என்று எண்ணினாரா? போலீஸில் இருந்து வந்த எம்எல்ஏ, எம்பி கள் உள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. நானும் அப்படி வந்தே எம்பி ஆனேன்.

இனி ஜேசி திவாகர் ரெட்டியின் கதை முடிந்துவிட்டது. தேர்தலில் அவர் மகன் வேலை கூட முடிந்துவிட்டது. அனந்தப்புரம் மாவட்டத்தில் அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்றன.

போலீசார் கவனத்தோடு பணியாற்றி வருகிறார்கள். இனியாவது ஜேசி வாயை கட்டுப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

திவாகர் ரெட்டியை கண்டிக்காமல் சந்திரபாபு நாயுடு வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eighteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.