அட கண்றாவியே! ஓவனில் பாம்பு..! பீட்ஸாவுடன் சேர்த்து சமைத்து… உவ்வே..!

உலகம் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
microwave ovan snake - 2026

ஓவனில் பாம்பு…. பீட்ஸாவுடன் சேர்ந்து பாம்பையும் சமைத்தே விட்டனர். இந்தச் செய்தியை படித்தால் நீங்கள் கட்டாயம் ஓவனை ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்வீர்கள்.

என்ன ஆச்சு தெரியுமா? ஒரு குடும்பத்தார் பீட்ஸாவுடன் சேர்த்து பாம்பைக் கூட சமைத்தனர். பீட்ஸா என்றால் பிடிக்காமல் இருக்குமா? சுடச்சுட பீட்ஸாவுடன் டொமேட்டோ சாஸ் போட்டு சாப்பிட்டால்… அப்பப்பா… என்ன ருசி…!?!

அமெரிக்காவில்.. வடக்கு கரோலினாவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் கூட அதேபோல் ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களால் யூகிக்க முடியாத ஒன்று அந்த டேஸ்டுக்கு எதிராகி விட்டது. இனி அவர்கள் பீட்ஸா என்றாலே பயப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

என்ன நடந்தது தெரியுமா?

வேக் ஃபாரஸ்ட் பிரதேசத்தில் வசிக்கும் அம்பர், ராபர்ட் ஹெல்ம் என்ற தம்பதியினர் பீட்ஸாவை தயார் செய்து ஓவனில் வைத்தார்கள். ஆனால் ஓவனில் இருந்து பீட்ஸாவின் கம கம வாசனைக்கு பதிலாக… ஏதோ எரிந்து கருகும் வாசனையும் புகையும் வந்ததால் ஆச்சரியப்பட்டனர். அதிர்ச்சியுடன் ஓவனை சுவிட்ச் ஆப் செய்தனர்.

ovan snake3 - 2026

உடனே ஓவனைத் திறந்து பார்த்து, புகை வெளியே வருவதற்கு வழி ஏற்படுத்தினர். அதன் பிறகு ஓவனை பரிசோதிக்கையில் பீட்ஸா நன்றாகவே இருந்தது. ஆனால் அதன் கீழ் உள்ள தட்டில் ஏதோ கயிறு போல் தென்பட்டது.

அதனை நன்றாக கூர்ந்து கவனித்த போது, அந்தத் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அது கயிறு அல்ல பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ந்து போயினர்.

ovan snake2 - 2026

உடனே ஸ்னேக் ஹெல்ப் லைனுக்கு போன் செய்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அந்த பாம்பு ஓவனின் சூட்டுக்கு இறந்திருந்தது. இவர்கள் காட்டுப் பிரதேசத்தில் வசிப்பதால் பாம்பு சமையலறைக்குள் புகுந்து வெப்பமாக இருக்கும் என்று ஓவனில் ஏறி அமர்ந்து இருக்கிறது.

அது தெரியாமல் அவர்கள் பிட்சாவை சமைக்கும் வேகத்தில் அதனையும் கூட சமைத்து விட்டார்கள் என்று தெரியவந்தது!

ovan snake1 - 2026

ஆகவே எதற்கும் ஓவனை பயன்படுத்தும் முன்னர் அதில் பல்லி, பச்சா, பாம்பு என ஏதாவது ஜீவராசிகள் உள்ளே புகுந்து அதைத் தங்கள் வீடாக்கிக் கொண்டிருக்கிறதா என சோதனை செய்து கொள்வது நல்லது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.