அட! ரயில்ல பயணம் பண்றது யாருன்னு பாருங்க!

சற்றுமுன்
train - 2026

மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், வீடு திரும்பவும் ரயில் போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. மக்கள் கூட்டம் நிறைந்த இந்த காலகட்டத்தில் ரயிலில் நின்றுகொண்டு போவதற்கு கூட இடம் கிடைப்பதில்லை.

அதிலும் சிலர், கூட்டம் நிறைந்த ரயில்களில் சில நேரங்களில் தங்களின் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளை ரயில் உள்ளே கொண்டு வந்து மற்றவர்களுக்கு தொந்தரவு தருவது வழக்கமான ஓன்று.

ஆனால், இங்கு நபர் ஒருவர் ரயிலில் எருமை மாட்டை கொண்டு வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kolkatta train - 2026

கொல்கத்தாவில் உள்ள புறநகர் ரயிலில் ஏறிய நபர் ஒருவர், தன்னுடன் சேர்த்து எருமை மாட்டையும் ரயிலில் ஏற்றியுள்ளார். ரயிலில் ஏறிய எருமை மாட்டை அருகில் இருந்த இருக்கையில் கட்டிபோட்டுவிட்டு அவரும் அருகில் நின்றுகொண்டு பயணம் செய்துள்ளார்.

இந்த காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.