லேடிஸ் ஹாஸ்டலாக போய் ஒரு குறிப்பிட்ட நேரத்தில… இளைஞன் செய்த செயல்! 34 பெண்கள் பாதிப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை
ladeis hostel - 2026

சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரே மாதிரியாக நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

wifi - 2026

விடுதியின் வைஃபை இணைப்பில் பிரச்சனை இருப்பதாக கூறி, தான் அதை சரி செய்ய வந்திருப்பதாகவும், வைஃபை இணைப்பில் உள்ள பிரச்னையை சரி செய்ய பெண்கள் அனைவரும் தங்கள் செல்போனை ஒரே இடத்தில் சார்ஜ் போடவேண்டும் எனவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பி ஒருசில பெண்கள் ஒரே இடத்தில் சார்ஜ் போட்டுள்ளனர்.

cell - 2026

ஒரே இடத்தில் இருக்கும் அணைத்து செல்போனைகளையும் அந்த நபர் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதுபோன்று சுமார் 34 பெண்களின் செல்போன்களை அந்த மர்மநபர் திருடியதாக கூறப்படுகிறது.

காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்த நபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், CCTV யில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டுடன் அவர் நடமாடியதும் தெரியவந்துள்ளது.

helmet - 2026

இதனை அடுத்து நடந்த விசாரணையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார் பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த பாலாஜி(31) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.