படபட பட்டாஸாய் சட்டமன்றம்… ‘கொர்’ என தூங்கி வழிந்த ஜெகன்!வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
jagan sleep assembly - 2026

ஆந்திர மாநில அசெம்பிளியில் தூங்கி வழிந்த ஜகன். போட்டோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகர்கள் மீது முக்கியமான விவாதம் நடைபெற்று வந்த தருணத்தில் முதலமைச்சர் ஒய்எஸ் ஜகன் உறங்கி வழிந்தார். மாநிலம் கொந்தளிக்கும் போது இந்த மனிதருக்கு உறக்கம் எவ்வாறு வருகிறது? என்று முன்னாள் அமைச்சர் நாரா லோகேஷ் ட்வீட் செய்துள்ளார் .

ஏபி அசெம்பிளியில் ஒய்சிபி எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தருணத்தில் முதல்வர் ஜெகன் தலைகுனிந்து தூங்கினார்.

ஒருபுறம் தலைநகர் மீது அசெம்பிளியில் முக்கிய விவாதம். வெளியே தலைநகர் விவசாயிகளின் தீவிர போராட்டம். இந்தப் பின்னணியில் மாநிலம் மொத்தமும் அசெம்பிளி கூட்டத்தொடரை ஆர்வத்தோடு கவனித்து வருகிறது.

அதே போல் அரசியல் தலைவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் எதிர்க்கட்சியினர் கவனித்து வருகின்றனர்.

https://twitter.com/NRI_Uganda/status/1219157227346354177

இவ்வாறு இருக்கையில் முதல்வர் ஜெகன் தூங்கி வழிந்தது பற்றி எதிர்கட்சியினர் ஏளனம் செய்து வருகின்றனர். அந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விவசாயிகளுக்கு உறக்கம் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி எங்குவேண்டுமானாலும் தூக்கம் வருகிறது? என்று நெட்டிசன்கள் ட்வீட்டி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.