கப்பலில் கொரோனா வைரஸ்: காப்பாற்ற கதறும் மக்கள்!

உலகம் பொது தகவல்கள்
coronavirus 759 4 - 2026

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் மக்கள், தங்களை எப்படியாவது ஜப்பான் அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

டோக்கியோ: ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் மக்கள், தங்களை எப்படியாவது ஜப்பான் அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர். இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது.

ship - 2026

இந்த கப்பலில் இருந்தவர்களில் மொத்தம் 138 பேர் இந்தியர்கள். இவர்களில் 8 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாமாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த கப்பலில் அதேபோல் மொத்தம் 400 அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 13 பேருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். மொத்தமாக அந்த கப்பலில் இருக்கும் நபர்களால் 70 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

கப்பலுக்கு உள்ளேயே இருப்பதால் இந்த நோய் வேகமாக பரவி வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்று மட்டும் அங்கு 6 பேருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ளது. சிறிய கப்பல்தான் அது. அதனால் மிக மிக வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது.

மீதம் இருக்கும் நபர்களுக்கும் வேகமாக வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அங்கு போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த கப்பலில் இருக்கும் மக்கள் இது தொடர்பாக இணையத்தில் நிறைய தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.பெண் ஒருவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில், எங்களை இங்கே ஏன் அடைத்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

நோய் தாக்கியவர்களை மட்டும் கூட கப்பலில் வைத்துவிட்டு, நோய் தாக்கதவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.

இதனால் எல்லோருக்கும் நோய் தாக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் பாத் ரூமில் அடைபட்டு கிடக்கிறோம். ஆம் நோய் தாக்கியவர்களை அப்படித்தான் அடைத்து வைத்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக நோய் தாக்கியவர்களில் இப்படி பாத்ரூமில்தான் இருக்கிறார்கள். அங்குதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். தூங்குகிறார்கள். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். மனித தன்மையோடு செயல்படுங்கள் என்று கூறியுள்ளனர்.

தற்போது அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. இந்த கப்பலை கண்டிப்பாக தங்கள் எல்லைக்குள் விட முடியாது என்று ஜப்பான் கூறிவிட்டது. எங்களால் இந்த வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது.

அதனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றுள்ளனர். அவர்களால் தற்போது திரும்பியும் போக முடியாது. இதனால் அந்த மக்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.