30 தோப்புக்கரணம் போட்டா… ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ஃப்ரீ… ஃப்ரீ.. ஃப்ரீ.!

இந்தியா சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
Anand vihar railway station squat machine - 2026
  • முப்பது தோப்புக்கரணம் போட்டால் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ஃப்ரீ.
  • தோப்புக்கரணத்திற்கும் பிளாட்பாரம் டிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு?
  • இலவசமாக எதற்காக தருகிறார்கள்? ஆச்சரியமாக உள்ளதா?

நீங்கள் தில்லியில் உள்ள ஆனந்தவிஹார் டெர்மினல் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் பிளாட்பாரம் டிக்கெட்டை தேவையான பணம் கொடுத்து பெற வேண்டியது இல்லை.

ஸ்டேஷனில் உள்ள ஒரு மிஷின் முன்னால் மூன்று நிமிடங்களில் முப்பது தோப்புக்கரணம் போட்டால் போதும். ஃப்ரீயாக பிளாட்பார்ம் டிக்கெட் தரப்படும். நீங்கள் அவ்வாறு தோப்புக்கரணம் போட்டு முடித்தவுடனே மெஷினிலிருந்து பிளாட்பாரம் டிக்கெட் வெளியில் வரும்.

இவ்வாறு எதற்காக செய்கிறார்கள் என்றால் ஃபிட்னஸ்., க்காக. இந்த மிஷின் பெயர் ஃபிட் இண்டியா ஸ்க்வாட் மிஷின். உடல் திறனை ஏற்படுத்துவது – ஃபிட்னஸ் மீது பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய ரயில்வே துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது.

சாதாரணமாக இந்த ஸ்டேஷனில் பிளாட்பார டிக்கெட் விலை 10 ரூபாய். அதை வாங்காமல் பிளாட்பாரத்திற்குள் நுழைந்தால் டிக்கெட் கலெக்டர் கேட்கும் போது கட்டாயமாக டிக்கெட்டை காட்ட வேண்டி வரும். அது இல்லாவிட்டால் ஃபைன் போடுவார்கள். சிறை தண்டனை கூட கிடைக்கும்.

இந்த எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு மூன்று நிமிடங்களில் 30 தோப்புக்கரணங்களை போட்டால் போதும். .ஃப்ரீயாக பிளாட்பாரம் டிக்கெட்டை பெற்றுவிடலாம். இந்த திட்டத்தை பலரும் பாராட்டி வரவேற்றுள்ள போதிலும் சிலர் மக்களை முட்டாள் ஆக்காதீர் என்று கூறி வருகின்றனர்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சிறுவன் 30 முறை தோப்புக்கரணம் போட்டு ரூ.10க்கான பிளாட்பாரம் டிக்கெட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்கிறான்.

ஏற்கெனவே தொலைதூர ரயில்களில் பொதுப்பெட்டியில் துண்டு போட்டு இடம் பிடித்து, அதனை ரூ.20 ரூ.50 என்று விற்று விட்டு, பணம் சம்பாதிக்கும் பலருக்கு அதுவேதான், பிழைப்பாக இருக்கிறது. இப்போது இன்னொரு பிழைக்கும் வழியை ரயில்வே காட்டியிருக்கிறது என்கிறார்கள் சிலர்.

ஒருவர் ஒரு நாளின் 12 மணி நேரத்தில் இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளியில் தோப்புக்கரணம் போட்டு குறைந்த பட்சம் 20 டிக்கெட்களைப் பெற்று விற்றால் கூட ரூ.150 வரை சம்பாதிக்கலாம்! அடடே… நல்ல ஐடியதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.