தில்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

இந்தியா சற்றுமுன்
pmmodi - 2026

தில்லியில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தலைநகர் தில்லியில் ‘கும்பல் வன்முறை’க் கலாசாரத்தில் ஈடுபடும் ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடுவர் என்பதால் அவர்களது போராட்டங்களுக்கு தடை கோரி நீதி மன்றத்தில் கோரப்பட்டது. ஆனால், அவர்கள் போராடுவதற்க் உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறி, போராட்டத்தைத் தொடர அனுமதித்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை முன்னிட்டு, ஷாகீன் பாக் இஸ்லாமிய குழு வன்முறையாளர்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அது போலவே வன்முறையைக் கையில் எடுத்தனர்.

இந்தியாவில் இதுவரையிலும் நடந்த வன்முறைகளில் எல்லாம், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தூண்டுதலில் முதலில் ,வன்முறைகளை நிகழ்த்தி விட்டு, அவர்கள் பதுங்கிக் கொள்வதும், இதை அடுத்து அமைதியை ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று போலீஸாரும் ராணுவமும் அவர்களைப் பாதுகாப்பதும் என்று சம்பவங்களே நடந்துள்ளன.

delhi protest1 - 2026

அந்த மரபை ஒட்டி, தில்லியிலும் வன்முறையாளர்கள் திங்கள் கிழமை முதல் இரு நாட்களுக்கு கடுமையான வன்முறையின அவிழ்த்து விட்டார்கள். அப்போதெல்லாம் அரசும் போலீஸாரும் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். கலவரச் சூழலை அடக்குவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பெரும்பான்மை ஹிந்துக்கள் இந்தக் குழு வன்முறையாளர்களால் தங்கள் சொத்துகளை இழந்து, உயிர்களை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், இப்போது கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில் போலீஸார், ராணுவம் ஆகியவற்றை அரசு வழக்கம் போல் நிறுத்தியுள்ளது.

தற்போது இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்…

தில்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜ நிலை திரும்ப போலீஸ் மற்றும் பல அமைப்பினர் களத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

அமைதியும், நல்லிணக்கமுமே நமது நெறிமுறைகளுக்கு மையமாக உள்ளது. அனைத்து நேரங்களிலும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை தொடர வேண்டும் என தில்லியில் உள்ள எனது சகோதர, சகோதரிகளை கேட்டுக் கொள்கிறேன். அமைதி மற்றும் சகஜ நிலையை விரைவில் கொண்டு வருவது இந்த நேரத்தில் முக்கியமானது… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.