கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
kamal shankar - 2026

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ஆம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளது. கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில்தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது லைகா!

இந்தியன் 2 செட்டில் விபத்து ஏற்பட்டதை அடுத்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறி கமல், லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் லைகா நிறுவனத்தின் சார்பில் அதன் டைரக்டர் நீல்காந்த் நாராயண்பூர் கமலுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

lyca - 2026

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது…
லைகா ப்ரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் டைரக்டராக பிப்ரவரி 22ம் தேதி நீங்கள் எங்கள் சேர்மனுக்கு எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்கிறேன்.

பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த துயரச் சம்பவங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை. உயிர் இழந்த 3 பேரின் குடும்பத்தாருக்காக பிரார்த்தனை செய்கிறோம். சம்பவம் குறித்து அறிந்தவுடன் சுபாஷ் கரன் மற்றும் மூத்த மேலாளர் அடுத்த விமானத்தில் பிப்.20ஆம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னைக்கு வந்து நேராக சவக்கிடங்குக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

நாங்கள் உங்கள் அலுவலகத்துடன் தொடர்பில் இருந்தோம். நீங்கள் சவக்கிடங்குக்கு வந்த 15 நிமிடத்தில் நாங்களும் வந்துவிட்டோம். அப்போதே… இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ 2 கோடி இழப்பீட்டை அறிவித்தார் சுபாஷ்கரன்.

மேலும் காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கும் வகை செய்யப்பட்டது. உங்கள் கடிதம் வரும் முன்பே இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டது. இது பிப்ரவரி 22ஆம் தேதிக்கு முன்பாக உங்களுக்கு தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.

சர்வதேச நிறுவனம் என்கிற முறையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தும் இந்தியன் 2 படப்பிடிப்பில் இப்படி ஒரு விபத்து நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

இதுபோன்ற விஷயங்களை அனைவரும் சேர்ந்துதான் கையாள வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். திறமைசாலியும், அனுபவசாலியுமான நீங்கள், மூத்த இயக்குநரான ஷங்கர் ஆகியோர் இருந்ததால் எங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உங்களின் இடத்துக்கு தகுந்து மேம்பட்டிருக்கும் என்று நம்பினோம். மொத்த படப்பிடிப்பும் உங்களது மற்றும் இயக்குநரின் மேற்பார்வையிலும் கட்டுப்பாட்டிலும் தான் நடந்தது என்பதை நினைவூட்டுகிறோம்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்திருந்தோம். சுந்தர்ராஜன், மணிகண்டன் ஆகியோரை இக்குநர் பரிந்துரை செய்ததன் பேரில் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர்களாக பணியமர்த்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வைத்தோம். அவர்கள்தான் படத் தயாரிப்புக்கு முழுப் பொறுப்பை ஏற்று, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டார்கள்.

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு எடுத்துள்ளோம். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக சுந்தர்ராஜன் மற்றும் மணிகண்டனிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விளக்கம் கேட்டுள்ளோம்.. – இவ்வாறு தெரிவித்துள்ளா நீல்காந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.