வரதட்சணை கொடுமை: காதலித்து மணந்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder dowry - 2026

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் என்னும் கிராமத்தில் செங்குட்டுவன்-சத்யா தம்பதி. இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னால் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

செங்குட்டுவன் அடிக்கடி சத்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வாராம். இதனால் அடிக்கடி இவர்களுக்கிடையே பிரச்சனை வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. கொஞ்சம் நேரத்தில் அந்த சண்டை கைகலப்பாக மாற, செங்குட்டுவன் சத்யாவை கொலை செய்து விட்டார் என்று கூறப்படுகிறது.

சத்யா அங்கேயே இறந்து விட்டதால் பதறிப் போன செங்குட்டுவன் சத்யாவின் உடலை அப்புறப்படுத்துவதற்காக காரில் ஏற்றியுள்ளார்.

தகவல் அறிந்து அங்குச் சென்ற சத்யாவின் உறவினர்கள், செங்குட்டுவன் சத்யாவின் உடலை காரில் ஏற்றுவதைப் பார்த்ததால், அந்த காரை அங்கிருந்து நகர விடாமல் அடித்து கண்ணாடி எல்லாம் உடைத்துள்ளனர்.

உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சத்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், செங்குட்டுவன் தான் அந்த கொலையைச் செய்தாரா அல்லது சத்யாவே தற்கொலை செய்து கொண்டாரா என்று பிரேதப் பரிசோதனையில் தான் தெரிய வரும் என்பதால் அந்த அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.