![சட்டுன்னு ஒரு வடை.. பொட்டுக்கடலை வடை! 1 pottu kadalai](https://dhinasari.com/wp-content/uploads/2020/04/pottu-kadalai.jpg)
பொட்டுக்கடலை வடை
தேவையானவை:
பொட்டுக்கடலை – 1 கப்,
பச்சரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.
![சட்டுன்னு ஒரு வடை.. பொட்டுக்கடலை வடை! 2 vadai 1](https://dhinasari.com/wp-content/uploads/2020/04/vadai-1.jpg)
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.