சட்டுன்னு ஒரு வடை.. பொட்டுக்கடலை வடை!

Published:

pottu kadalai - 2026

பொட்டுக்கடலை வடை

தேவையானவை:
பொட்டுக்கடலை – 1 கப்,
பச்சரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
உப்பு – ருசிக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.

vadai 1 - 2026

செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியுங்கள். அதனுடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான தண்ணீரும் சேர்த்து நன்கு பிசைந்து சிறு வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சில நிமிஷங்களிலேயே தயாரிக்கக் கூடிய இன்ஸ்டன்ட் வடை இது.

Related articles

Recent articles

spot_img