மகிழ்ச்சியாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
smile

எது பக்தி எவனுடைய மனது பகவானைப் பற்றி சிந்தனை செய்கிறதோ எவன் பகவான் நாமஸ்மரணத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறானோ அவனுக்கு எப்பேர் பட்ட கஷ்டம் வந்தாலும் அவை சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும்.

கிருஷ்ணனின் கட்டளைப்படி தர்மராஜன் எல்லா தர்மங்களையும் அறிந்த பீஷ்மரிடம் எந்த தர்மம் மிகவும் உயர்ந்தது என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

abinav

அதற்கு பீஷ்மர் எல்லா தர்மங்களையும் விட ஆராதனைக்கு பக்திதான் அவசியம் ஆடம்பரம் அல்ல மற்றவர்கள் பாராட்டி அதனால் நமக்கு புகழ் வரட்டும் என்பதற்காக அல்ல பகவத் ஆராதனை.

பகவானை வணங்கும் விஷயத்தில் சூழ்நிலை பற்றியும் மற்றவரின் கருத்தை பற்றியும் பொருட்படுத்த வேண்டியதில்லை நாம் பகவானுக்கு அடிமை. அவரை வணங்குவது நம் கடமை என்ற பாவனை தான் நாம் பூஜை செய்யும் பொழுது இருக்க வேண்டும்

bharathi theerthar

வேறு எந்த விதமான யோசனையும் குறுக்கிடக் கூடாது அப்படி குறுக்கிட்டால் பூஜையினால் பலன் கிடைக்காது தயிர் வெண்ணை விற்கும் நேரங்களில் கூட கோவிந்தா தாமோதரா என்று பகவான் நாமத்தை சொல்வார்களாம் கோபியர்கள்.

ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பை மேம்படுத்த, அசல் முகத்தை அலங்கரிப்பது அவசியம். அதேபோல், நாம் மகிழ்ச்சியை நாடினால், நாம் கடவுளை வணங்க வேண்டும். ஏனென்றால், வேதவசனங்களின்படி, கடவுளுக்கும் ஜீவாவுக்கும் (தனிப்பட்ட ஆத்மா) உள்ள தொடர்பு என்பது ஒரு முகத்திற்கும் அதன் பிரதிபலிப்புக்கும் இடையில் உள்ளது. என்று ஜேஷ்ட மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாசுவாமிகள் அவர்கள் அருளுரை வழங்குகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.