ஆரோக்கிய உணவு: பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
betroot ammani kozhukattai
betroot ammani kozhukattai

பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை

தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
பீட்ரூட் பெரியது – ஒன்று (துருவவும்),
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் – 3,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூளை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இரண்டு கப் நீருடன் தேங்காய் எண்ணெய், சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறவும் (நான்-ஸ்டிக் வாணலியில் செய்வது எளிது). மாவு இறுகும்போது பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கி, விருப்பமான வடிவம் (உருளை, உருண்டை) கொடுக்கவும்.

ALSO READ:  கலக்கிய வாழ்த்து போஸ்டர்கள்; கோயிலில் வழிபட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

இட்லித் தட்டில் எண்ணெய் தடவி மாவு உருளை/உருண்டையை அதில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், பீட்ரூட் துருவல், வெந்த கொழுக்கட்டையை போட்டு, சிறிது உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Posts by Suprasanna Mahadevan: