
வெள்ளரி விதை ஸ்வீட் டிலைட்
தேவையானவை:
வெள்ளரி விதை – 20 கிராம்,
கொப்பரைத் துண்டுகள் – ஒரு டீஸ்பூன்,
கலர் சீரக மிட்டாய் – 2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு,
எள் – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வெறும் வாணலியில் வெள்ளரி விதை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் எள் சேர்த்து வெடிக்கவிட்டுப் பொடிக்கவும். பாத்திரத்தில் வெள்ளரி விதை, கொப்பரைத் துண்டுகள், கலர் சீரக மிட்டாய், வறுத்த வேர்க்கடலை, பொடித்த எள், சர்க்கரைத்தூள், நெய் சேர்த்துக் கலந்துப்பரிமாறவும்.