குழந்தைங்க சாப்பிடுவாங்க எம்மியா! செய்யுங்க சேமியா பான் கேக்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
vermiselly pan cake

சேமியா பான் கேக்

தேவையானவை:
சேமியா – முக்கால் கப்,
தண்ணீர் – கால் கப்,
முட்டை – 2,
தேன் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பேகிங் பவுடர் – ஒன்றரை டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு.

அலங்கரிக்க:
பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி (அல்லது) டூட்டி ஃப்ரூட்டி.

செய்முறை:
சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துவிட்டு, அதனை நுரை வரும் அளவுக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் தேன், ‘பேகிங் பவுடர்’, வேக வைத்த சேமியா, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

மிதமான தீயில் ‘தவா’வினை வைத்து சூடானதும், நெய் விடவும். பிறகு மாவை தோசை போல் வார்த்து, திருப்பிப் போடாமல் சுடவும். அதன் மேல் பொடித்த சர்க்கரை, முந்திரி, பாதாம் பொடி அல்லது டூட்டி ஃப்ரூட்டி தூவி… ரோல் போல் சுருட்டிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.