இதுதான் ‘ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ பின்னணி! இதில் எங்கிருந்து வந்தது சேவாபாரதி?

அடடே... அப்படியா? கட்டுரைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
friends of police
friends of police

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த மகன், மரக்கடை நடத்தி வந்த தந்தை என வணிகர்கள் இருவரும் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கி அடிக்கப்பட்டு, இரு தினங்களில் உயிரிழந்த விவகாரத்தில், போலீஸாருடன் சேர்ந்து பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்த விவகாரத்தில், சேவாபாரதி அமைப்பின் நபர்களும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் இருப்பதாகவும், அவர்களின் பின்னணியில் தான் இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், திருமுருகன் காந்தி, சுந்தர்வள்ளி உள்ளிட்ட சிலரும் சில இயக்கங்களும் உள்நோக்கத்துடன், செய்திகளைப் பரப்பி வரும் நிலையில், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸின் பின்னணி குறித்து இப்போது பரவலாக அலசப் படுகிறது.

பொதுவாக சேவாபாரதி டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தன்னார்வத் தொண்டர்களாக சமூகப் பணிகளில் தான் ஈடுபட்டுவந்துள்ளார்களே தவிர, போலீஸாருடன் தொடர்பில் இருக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ்., சங்க குடும்ப அமைப்பான சேவாபாரதியின் தொண்டர்களை எக்காலத்திலும் போலீஸார் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் போன்ற அமைப்புகளில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அந்த அமைப்பே தெரிவித்துள்ளது.

friends of police letter
friends of police letter

இந்நிலையில், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தொடங்கப்பட்டதும் அதன் நிர்வாகிகளாக இருப்பவர்களும் கிறிஸ்துவ மத பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை எப்படி உள்ளே இழுப்பார்கள் என்றும் கேள்விக் கணைகள் தொடுக்கப் படுகின்றன.

இது குறித்து சமூகத் தளங்களில் வைரலான கருத்துகள்…

எனவே ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸில் உள்ள நிர்வாகிகள் யாரும் சங்கிகள் அல்ல…
பாவம் டுபாக்கூர் போராளிகள் மூஞ்சில மனுசச் சாணி!
எப்படியாவது சாத்தான்குளம் விவகாரத்தை காவிகளோடு முடிச்சுப்போட்டு ரைட்டப்பா எழுதினாங்க..
முதல்ல பென்னிக்ஸோட தேசியவாத பதிவுகள் இவனுங்கங்க முகத்தில சப்பு,சப்புன்னு அறையுது!
அடுத்து போலிஸ்மீது நடவடிக்கையெடுத்தப்பிறகும் *ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் காவிகளோடது…” னு அவங்க அடிச்சுதான் இறந்துப்போய் விட்டதாக பல NGO ரைட்டப்புகள், ஜிங்கிள் பெல்ஸ் நெறியாளர் களின் விவாதங்கள்….
இப்ப அந்த அமைப்பு முழுக்க மிஷநரிகளின் நிர்வாகத்தில் உள்ளதும்.. அப்படியெதுவும் நடக்கவில்லையென்கிற மறுப்பும் வெளிட்டுள்ளனர்!
அடுத்து போலிஸ் நடவடிக்கை பத்தாது..
‘ஆக’ எடப்பாடி பதவி,
விலக வேண்டுமென ஸ்டாலின் அறிக்கை கொடுத்தாப்படி.. இப்ப அவரது சகோதரி அரசின் நடவடிக்கை திருப்தியென சொல்லியாச்சு… அமெரிக்காவில் நடத்தன ஒரு போராட்டத்தை இங்கேயும் அரங்கேற்றலாமென்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன!

friends of police troll
friends of police troll

பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு ப்ரோ!
ஆமா!நிறுவனர் பேரு பிரதீப் வி ஃபிலிப்.
மாநில நிர்வாக அதிகாரி – லூர்துசாமி.
துணை நிர்வாக அதிகாரி – டாக்டர் ஜான் ஜோசப்.
இப்போ சொல்லுங்க இதுக்கும் RSS க்கும் சம்பந்தமுண்டானு.

சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து, ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸாருடன் சேர்ந்த ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், குற்றச்சாட்டை இந்த அமைப்பின் நிர்வாகி லூர்துசாமி மறுத்துள்ளார். ‘சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்ட இளைஞர்கள்தான் இருந்துள்ளனர். அவர்கள் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை’ என்று லூர்துசாமி கூறியுள்ளார்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு உருவான விதம்

தமிழக சி.பி.சி.ஐ.டி கிரைம் பிராஞ்ச் டி.ஜி.பி யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டதுதான் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு. அரசுடன் கூட்டு சேர்ந்த தன்னார்வ அமைப்பு.

1993ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது மாவட்ட எஸ்.பி- யாக பிரதீப் வி. பிலிப் பணியாற்றினார். போலீஸின் அதிகாரத்தை மக்களுக்கும் பங்கீட்டு கொடுப்பதுதான் இதன் நோக்கம்.

பின்னர், 1994ல் தமிழகம் முழுவதும் இந்த அமைப்பு தொடங்கப் பட்டது. குற்றச் செயல்களை தடுக்க உதவுவது, குற்றச் செயல்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுப்பது போன்றவை இவர்களின் முக்கியப் பணிகளாக இருந்தன.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பின்
முக்கியப் பணிகள்

  • போக்குவரத்தை கட்டுப்படுத்துவது, போக்குவரத்து விதிகளை மக்கள் கடைபிடிக்க உதவுவது…
  • நேர்மை தவறாமல் காலம் தவறாமல் இருக்க வேண்டும்
  • குற்ற செயல்களை தடுக்க போலீசுக்கு உதவ வேண்டும்
  • சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உதவ வேண்டும்.
  • கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க போலீஸ் அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
  • எப்போது அழைத்தாலும் பணிக்கு வரத் தயாராக இருக்க வேண்டும்
  • சமூகப்பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் செய்ய கூடாதவை…!

  • காவல் நிலையத்துக்கு எந்த வித பரிந்துரைகளுடனும் வரக் கூடாது
  • எந்த சட்ட விரோத செயலிலும் ஈடுபடக் கூடாது
  • எந்த சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடக் கூடாது.
  • எந்த போலீஸ் அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது.
  • நாட்டுக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கக் கூடாது
  • மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இருக்கக் கூடாது.
  • ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர் என்ற அடையாளத்தை தவறாக பயன்படுத்த கூடாது.
  • நன்கொடை, நிதி திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது

இப்படி எல்லாம் விதிகள் இருந்தாலும், போலீஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் இவர்களின் வேலையாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன.

காவல்துறை அதிகாரிகளுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வது, பிடிக்காதவர்களை போட்டுக் கொடுப்பது, கிராமப் புறங்களில் தாங்களே மினி போலீஸார வலம் வருவது போன்ற வேலைகளிலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில்தான், இப்போது ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சர்ச்சைகளை அடுத்து, அந்த அமைப்பினருக்கு சில விஷயங்களில் தடைகளைப் போட காவல் துறை உயரதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.