![வைத்தீஸ்வரன் கோயிலில்... சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்! 1 hmk against china](https://dhinasari.com/wp-content/uploads/2020/07/hmk-against-china1.jpg)
சீன ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 7) வைத்தீஸ்வரன்கோயிலில்… பிரசார இயக்கம் நடத்தப் பட்டது.
![வைத்தீஸ்வரன் கோயிலில்... சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்! 2 hmk against china](https://dhinasari.com/wp-content/uploads/2020/07/hmk-against-china2.jpg)
பாரதத்தின் மீது பொருளாதார ரீதியில் மறைமுக யுத்தம் நடத்தும் சீனாவின் சதித் திட்டத்தை முறியடிக்க சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து மக்கள் கட்சி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
![வைத்தீஸ்வரன் கோயிலில்... சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்! 3 hmk against china](https://dhinasari.com/wp-content/uploads/2020/07/hmk-against-china3.jpg)
சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்து மக்கள் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
![வைத்தீஸ்வரன் கோயிலில்... சீன பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம்! 4 hmk against china](https://dhinasari.com/wp-content/uploads/2020/07/hmk-against-china4.jpg)
மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் திலகராஜா, நிர்வாகிகள் தனசேகரன், அருட்செல்வன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.