மகளை தெருவில் ஓட ஓட விரட்டி இறக்கும் வரை கட்டையால் அடித்து கொன்ற தந்தை! வேடிக்கை பார்த்த தாய்!

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
murder-2

ஜோர்தான் நாட்டில் சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் துரத்திச் சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி வந்த 30 வயது அஹ்லம் என்ற பெண்ணே தந்தையின் கொடூர செயலுக்கு இரையாகியுள்ளார்.

அந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. குடியிருப்பில் இருந்து யாராவது காப்பாற்றுங்கள் என அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த பெண்ணை, துரத்தி வந்த தந்தை சிமென்ட் கட்டையால் தலையை குறிவைத்து தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்து தரையில் சரிந்த அஹ்லம், இறக்கும் வரை தந்தையால் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

மரண பயத்தில் அஹ்லம் அலறியதைக் கேட்டு தெருவில் கூடிய பொதுமக்கள், அவர்கள் முன்னிலையில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

அஹ்லம் அவரது தாயாரிடம், கெஞ்சியும் அந்த தாயார் சிலையாக நின்றிருந்தார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த தந்தையை தடுத்து நிறுத்த சிலர் முயன்ற போதும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறுகின்றனர்.

murder-1-1

இதனிடையே, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த போலிசார், மகளின் சடலத்தின் அருகே தேநீர் அருந்தியபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த தந்தையை கண்டு அதிர்ந்துள்ளனர்.

அஹ்லம் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜோர்தான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக்கொலை எனவும் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலர் சமூக ஊடகங்களில் கடுமையாக வாதிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.