‘பரதேசி’ என்ற காரப்பன்… சிறுமுகை கோயிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
karappansilks - 2026

‘ஹிந்து கடவுளரை இழிவாகப் பேசிய காரப்பனைக் கைது செய்ய வேண்டும்; பரதேசி என்று குறிப்பிட்ட காரப்பன், ராமர் கோவிலில் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ஹிந்து இயக்கங்கள் வற்புறுத்தி வருகின்றன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் உள்ள ‘காரப்பன் சில்க்ஸ்’ உரிமையாளர் காரப்பன், கோவையில் நடந்த கருத்தரங்கில், அத்திவரதர் மற்றும் கிருஷ்ணர் குறித்து இழிவாக பேசினார். பரதேசி, பக்காத் திருடன் என்ற காரப்பனை கைது செய்ய வலியுறுத்தி ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

karappan - 2026

ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் இது குறித்து பேசுகையில், ”காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் சிறுமுகையில் உள்ள ராமர் கோவிலில் மண்டியிட்டு, ஊர்ப் பெரியவர்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும்; இதுதான் எங்கள் கோரிக்கை…என்று குறிப்பிட்டார்.

பாஜக., மாநில செயலாளர் நந்தகுமார் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘சிறுமுகை காரப்பன் பேச்சால் ஹிந்துக்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது. கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை இழிவாகப் பேசி, பொது மக்களிடம் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரப்பன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரப்பன் குறித்த கண்டனங்கள், கருத்துகள் சமூகத் தளங்களிலும் எதிரொலித்தன.

தீபாவளி..
புதுத்துணி..
அதோடு சேர்த்து ஈவெரா!
Deadly combo!
பெரியார் கொள்கை பேசியதற்காக இந்த
கடையில் யாரும் துணி வாங்க கூடாதாம், “சிறுமுகை” பகுதியில் உள்ள கழக உடன்பிறப்புகள் இந்த கடையில் மட்டும் தீபாவளிக்கு துணி வாங்கும்படி வேண்டுகோள் வைக்கிறேன்… #WeSupportKarappanSilks

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.