திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு… சித்தூர் மாவட்டத்தில் ஆக.5 வரை முழு அடைப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirupathi-entrance
tirupathi-entrance

திருப்பதி செல்பவர்கள் கவனத்துக்கு…: திருப்பதியில்… ஆகஸ்டு 5 வரை செவ்வாய் கிழமையிலிருந்து மிக அத்தியாவசிய தேவைகளும் மெடிக்கல் ஷாப்புகளும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று தெரிவித்தார்கள். அதன்பின் வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. தினம் தினம் அதிகரித்து வருகின்ற பாசிடிவ் கேசுகள் பயமுறுத்துகின்றன. முக்கியமாக திருப்பதியில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது. நகரத்தில் சுமார் 1500 க்கும் மேலாக கேசுகள் பதிவாகி உள்ளன.

அதனால் அதிகாரிகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் உள்ளார்கள். நிலைமையை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன் எச்சரிக்கைகள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதன்படி செவ்வாய் கிழமையிலிருந்து பரிபூரண ஊரடங்கு விதிப்பதாக கலெக்டர் நாராயண பரத் குப்தா தெரிவித்தார்.

செவ்வாய் கிழமையிலிருந்து அத்தியாவசிய சேவைகளும் மெடிக்கல் ஷாப்களும் தவிர மீதி கடைகள் காலை 6 முதல் 11 வரை மட்டுமே அனுமதி இருக்கும் என்று கூறினார். அதன்பின் வாகனங்கள் கூட அனுமதிக்க மாட்டோம் என்றும் இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 5 வரை நீடிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

bharath-gupta-ias
Sri Dr.N. Bharath Gupta IAS

இந்த மாதம் 31ம் தேதி அனைவரும் அமர்ந்து பேசி பாசிட்டிவ் கேசுகளின் எண்ணிக்கையை பொறுத்து லாக்டௌன் மாதிரியான உத்தரவுகளை விதிப்பதா அல்லது மீண்டும் 14 நாட்களுக்கு நீட்டிப்பதா என்பது பற்றி தீர்மானம் எடுத்தார்கள்.

சித்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் மிகவும் அதிகமாகி வருவதால் ஒவ்வொருவரும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். ஒவ்வொருவரும் கட்டாயம் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க உதவ வேண்டும் என்று எஸ்பி ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.

போலீஸ் துறையிலும் கொரோனா கேசுகள் அதிகமாகி வருகின்றன என்றும் இதுவரையிலேயே இரு போலீசார் கொரோனா காரணமாக மரணித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.