
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வெற்றி மாணவி ஜீவிதாவின் மருத்துவ கல்வி செலவை முழுவதையும் தான் ஏற்றுக்கொண்டதாக தமிழக பாரதீய ஜனதா கட்சியன் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற அனகாபுத்தூரை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவ கல்வி செலவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுள்ளார்.
ஏழை தையல் தொழிலாளா் மகளான ஜீவிதாவின் குடும்பச் சூழ்நிலை காரணமாக அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை செலுத்துவதே தங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று என மாணவியின் குடும்பத்தினர் கவலை தெரிவித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்வதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும்
ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும். மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவி ஜீவீதாவும் அவளது குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் தமிழிசை சௌந்திரராஜனுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனா். மேலும் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி கூறுவதாகவும்,
எனது மருத்துவ படிப்பு முடிந்தவுடன் தமிழிசை சௌந்தரராஜன் போல சிறந்த மருத்துவராக பணி செய்து ஏழை, எளிய மக்களுக்கு என்னால் முடிந்த சிறந்த சேவையை அளிப்பேன் என உறுதி கூறினார்.



