கேரளத்தில்… 18 சிஸ்டர்களுக்கு க்ளஸ்டராக பரவிய கொரோனா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
st-marys-provice-chunangamveli
st-marys-provice-chunangamveli

கிறிஸ்தவ சிஸ்டர்கள் 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். கேரளாவில் கொரோனா தொற்றுநோய் தலைவிரித்து ஆடுகிறது. தினம் தினம் பாசிடிவ் கேசுகளின் எண்ணிக்கையும் ஒரேடியாக பெருகி வருகிறது.

கேரளாவில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடினமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட போதிலும் கேசுகள் மட்டும் வளர்ந்து கொண்டே வருகின்றன.

அண்மையில் ஆல்வா அருகில் சுனங்கம்வேலியில் ஒரு கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த கான்வென்டில் உள்ள நன்கள் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தம் 18 பேர் கொரோனா பாசிட்டிவாக பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இவர்கள் அனைவரும் செயின்ட் மேரிஸ் பிராவின்ஸை சேர்ந்தவர்களாக தெரிவித்தார்கள்.

இவர்கள் அனைவரும் அண்மையில் குஜிப்பல்லியில் உள்ள ஒரு 71 வயது கன்னியாஸ்திரியை சந்தித்தார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அந்த 71 வயது சந்நியாசினி கொரோனா காரணமாக சமீபத்தில் மரணமடைந்ததாக தெரிவித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.