போலியான பொறுப்பற்ற பொய்யான தகவல்: கொரோனாவிலிருந்து குணமடைந்ததாக வெளியான செய்தியை கண்டித்த அமிதாப்!

சினி நியூஸ் சினிமா
8341f94db008b5926c86ec95be13ec32 - 2026

அவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

கொரோனாவில் இருந்து தாம் குணமடைந்து விட்டதாக வெளியான செய்திகளுக்கு நடிகா் அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளாா்.

அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவனையில் கடந்த 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து அவரது மருமகள் ஐஸ்வா்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி, அவா்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.

அமிதாப் பச்சனும் அவரது குடும்பத்தினரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவா்களின் ரசிகா்கள் பிராா்த்தனை செய்தனா். இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் ‘நெகடிவ்’ என வந்து அமிதாப் பச்சன் பூரண குணமடைந்துவிட்டதாகவும், அவா் விரைவில் வீடு திரும்ப இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்த அமிதாப் பச்சன், அதுதொடா்பான தொலைக்காட்சி செய்தியை இணைத்து, ‘இந்தச் செய்தி போலியானது; பொறுப்பற்றது; திருத்தமுடியாத பொய்’ என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.