கொரோனாவை வென்று… வாழ்க்கையில் தோற்று… தற்கொலை செய்த தம்பதி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
corona couple suicide - 2026
  • கொரோனாவை வென்றார்கள். ஆனால் வாழ்க்கையில் தோற்றார்கள்…
  • பொருளாதார தொல்லைகளோடு கூட அண்டை அயலாரின் எதிர்ப்பு…
  • மூன்று மாடிக் கட்டிடத்தின் மேலிருந்து குதித்து தம்பதிகள் தற்கொலை.

கோவிட் பாதிப்பிலிருந்து விடுபட்ட கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தபின் உறவினர்களும் அண்டை அயலாரும் அவர்களிடம் காட்டிய வெறுப்பை தாங்க முடியாமல் மூன்றாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் தர்மவரம் பட்டணத்தில் ஞாயிறு அன்று விடியற்காலையில் இந்த சம்பவம் நேர்ந்தது. தர்மவரம் பட்டணத்திலுள்ள தேருபஜாரை சேர்ந்த பணிராஜ் (39), சிரிஷா (36) இருவரும் கணவன் மனைவியர். இவர்களுக்கு 12 வயது மகன் பாலாஜி உள்ளான்.

பணிராஜ் ஊமையானாலும் தன் தந்தையிடமிருந்து பரம்பரையாக வந்த வெல்ல வியாபாரத்தில் தன்னம்பிக்கையோடு முன்னேறியுள்ளார். ஆனால் கொரோனா பின்னணியில் வியாபாரம் சரியாக நடக்காததால் பொருளாதார தொல்லைகளுக்கு ஆளானார். அதனால் வீட்டிலிருந்தே மளிகை கடை ஏற்பாடு செய்து கொண்டார்.

அந்த சமயத்தில் 10 நாட்களுக்கு முன்பு பணிராஜின் தாய் வரலட்சுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். பணிராஜ், சிரிஷா டெஸ்ட் செய்து கொண்டபோது அவர்களுக்கும் பாசிட்டிவ் வந்தது. அதனால் அவர்கள் கோவிட் சென்டருக்குச் சென்று சிகிச்சை பெற்று இரண்டு நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆனார்கள்.

வியாபாரத்தில் நஷ்டம் வந்ததால் அவர்களுடைய ஒரு வீட்டை விற்றும் கடனை எல்லாம் தீர்க்க முடியாமல் போனது. கடன் தீர்க்கும் வழி தெரியாமல் போனதும் கொரோனாவில் இருந்து உடல் நலம் பெற்று வீட்டுக்கு வந்தபின் அண்டை அயலாரும் உறவினர்களும் இவர்களிடம் நெருங்காமல் விலக்கியதும் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் வருந்தினார்கள்.

சனிக்கிழமை மகனை தாத்தாவின் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஞாயிறு அன்று விடியற்காலையில் தாம் இருக்கும் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர். பணிராஜ் உடனுக்குடன் மரணமடைந்தார். சிரிஷா அரசாங்க மருத்துவமனையில் மரணமடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.