நோயாளியை வீல் சேரிலிருந்து தள்ளிவிட்ட மருத்துவமனை ஊழியர்! வைரல் வீடியோ!

கோவை சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0816_153747

கிருஷ்ணகிரியில் நோயாளி ஒருவரை மருத்துவ பணியாளர் வீல் சேரில் இருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவர், கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால், சரியாக அமர காலதாமதம் ஆனதை உணர்ந்த மருத்துவப் பணியாளர் அவர் மீது கோபம் கொண்டு, அவரை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டார்.

Screenshot_2020_0816_153708

இந்த நோயாளி சிறுநீரக பாதிப்புக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என கூறப்படுகிறது. அவர் வீல் சேரில் அமர முடியவில்லை என கூறியதை அடுத்து மருத்துவ பணியாளர் கீழே தள்ளி விட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்ட மருத்துவ பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.