அத்தியாவசியப் பட்டியலில் சமையல் சிலிண்டர் இன்றியமையாததாகிவிட்டது. அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆர்டர்கள் அதிகமாக வருவதால் டெலிவரி பணியாளர்கள் துரிதமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் சிலிண்டர் டெலிவரி கிடைப்பதில் தாமதம் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 நாட்களில் மட்டும் சமையல் சிலிண்டர் டெலிவரி கிடைப்பதற்கான காலம் ஒரு நாளிலிருந்து மூன்று நாட்களாக உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிலிண்டர் விநியோகப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெலிவரிக்கு தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது சிலிண்டர் விநியோகப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களில் சுமார் 20 சதவீதப் பேருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 2ஆவது அலையில் பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக, அடுத்து வரும் நாட்களில் சிலிண்டர் டெலிவரி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து நாட்கள் வரையில் ஆகும் என்று கூறப்படுகிறது. அதேபோல, சமீப காலமாகவே சிலிண்டர் முன்பதிவுகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா காலம் தீர்வுக்கு வந்ததும் மீண்டும் பழையப்படி சிலிண்டர் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.