சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள அம்மா உணவகத்தின் வாயிலில் இருந்த பெயர் பதாகை, உள்ளே இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுகவை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
ஸ்டாலின் தான் வாராரு.. விடியல் தரப் போறாரு என்று ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வெப்சைட்கு வெப்சைட், மொபைலுக்கு மொபைல் அலறல் சத்தம் இத்தனை நாட்களாக ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் திமுக.,வினர்.
இப்போது ஸ்டாலின் தான் வந்தாரு.. விடியல் தரப் போறாரு என்று காட்டும் விதமாக, ஏழை எளிய மக்கள் அன்றாட பசியைப் போக்க தொடங்கப் பட்ட அம்மா உணவகத்தினை அடித்து நொறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுக., குண்டர்கள். சென்னையில் 92 வது வட்டம் அம்மா உணவகம் இன்று காலை திமுக., குண்டர்களால் அடித்து நொறுக்கப் பட்டது.
திமுக., அதிமுக., மாறி மாறி ஆட்சிக்கு வருவதும், ஒரு கட்சியின் திட்டங்களை மற்ற கட்சி பெயர் மாற்றுவது அல்லது திட்டத்தையே முடக்கிப் போடுவது என்பதும் இதுவரை தமிழகம் கண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் அரசியலைக் கைஎடுத்து வந்தனர். அந்த கருத்தோட்டம் விலகாத வகையில், அம்மா பெயர் தாங்கிய அனைத்தும் இந்த ஆட்சியில் அழிக்கப்படலாம். அதற்கான முன்னோட்டத்தை இன்று தொடங்கி வைத்திருக்கிறார்கள் திமுக.,வினர்.