ஸ்ரீவில்லிபுத்தூரில்… ஓபிஎஸ் மகன் சிறப்பு வழிபாடு!

மதுரை லைஃப் ஸ்டைல்
mp-ravindranath-in-srivilliputhur
mp-ravindranath-in-srivilliputhur
  • திருவில்லிபுத்தூருக்கு தேனி எம்பி திடீர் வருகை…
  • ஆண்டாள் கோவில், குலதெய்வ கோவில்களில் வழிபாடு…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகத் தோப்பு. செண்பகத் தோப்பில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களின் குலதெய்வக் கோவில் உள்ளது. இன்று துணை முதல்வரின் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் குலதெய்வக் கோவிலுக்கு வந்திருந்தார்.

mp-ravindranath-in-srivilliputhur1
mp-ravindranath-in-srivilliputhur1

அவர் வருகையையொட்டி கோவிலில் சிறப்பு அபிசேகம், அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் திருவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அவருக்கு சிறப்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.

mp-ravindranath-in-srivilliputhur2
mp-ravindranath-in-srivilliputhur2

ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த ரவீந்திரநாத் குமாருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். எம்பியுடன் திருவில்லிபுத்தூர் நகர் கழக செயலாளர் இன்பத்தமிழன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.