அந்த மாதிரி கேரக்டர் நடிப்பதில்லை.. நாகார்ஜுன் குடும்ப பெயர் கெட்டுவிடும்: சமந்தா!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
nagaarijun

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, ” தனக்கு வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க மிகவும் பிடிக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தும் நான் நிராகரித்துவிட்டேன். காரணம் தற்போது நாகர்ஜுனா வீட்டு மருமகள் என்பதால் அவரது பெயர் என்னால் கெட்டுவிடக்கூடாது என்று பயந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனமாக இருக்கிறேன் என்று சமந்தா பொறுப்பான மருமகளாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.