திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்

சற்றுமுன்

திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்


விழுப்புரத்தில்திருநங்கைகளுக்கான சட்டவிழுப்புணர்வு முகாம். மற்றும் பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாமும் நவம்பர் 10ஆம் தேதி துவங்கப்பட்டது. 


இந்த முகாமில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமை தாங்கி திருநங்கைகள் எதிர்கொள்ளும் சட்ட பிரச்னைகள் குறித்து அவர்கள் விழிப்புணர்வு கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார்.


சென்னை கதர் மற்றும் கிராம தொழில் வாரிய மாநில இயக்குனர் திரு.கே. எஸ். லக்ஷ்மி நாராயணன் அவரகள் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசுகையில், திருநங்கைகளுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பத்து நாட்கள் தொடர்ந்து நடை பெறுகிறது. இதில் சிறப்பு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள்.  Pmegp scheme முலம் 1000 திருநங்கைகளாவது பங்கேற்று பயிற்சி பெற்று சுய தொழில் தொடங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் . மேலும் திருநங்கைகள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன செய்யப்படும் என்று கூறி லக்ஷ்மி நாராயணன் நம்பிக்கை அளித்தார். பத்து நாள் பயிற்சி முடிந்ததும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.


இந்த நிகழ்சி பற்றி அறிந்ததும் மிகவும் மகிழ்சியாக இருந்தது.


திருநங்கைகளில் பெரும்பாலோர் நங்கு படித்து திறமைசாலிகளாக இருக்கிறார்கள். சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழ விரும்புகிறார்கள். ஆனால் சமூகத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். சமூகம் என்றால் நம்மைப் போன்றவர்கள் தானே! இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். சக மனிதர்கள் நம்மைக் கண்டு பயப்படும்படியா நாம் நடந்து கொள்கிறோம்?


நாம்தான் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை ஆதரிக்க வேண்டும். அவர்கள் இழந்துவிட்ட தன்னம்பிக்கையை மீண்டும் பெற உதவ வேண்டியது நம் கடமை.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.