போலீஸ் ஐஜியை காருக்குள் வைத்து தீ வைத்து எரித்து கொல்ல முயற்சி

இந்தியா சற்றுமுன்

கர்நாடக மாநிலம், உத்தர் கன்னடா மாவட்டத்தின் கும்டா பகுதியை சேர்ந்த 19 வயது இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டதையடுத்து இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.

பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்தான் இந்த கொலைக்கு காரணம் என்பது அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

காவல்துறை இதுவரை எந்த அமைப்பின் மீதும் வெளிப்படையாக சந்தேகம் வெளிப்படுத்தவில்லை.*_

இந்த நிலையில் கலவரத்தை அடக்க காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. நிலைமை கைமீறியதால், வன்முறை நடைபெறும் இடங்களை மேற்பார்வையிட மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ஹேமந்த் நிம்பால்கர் சென்றிருந்தார்.

அப்போது கலவரக்காரர்கள், போலீஸ் அதிகாரி சென்ற இன்னோவா காருக்கு தீ வைத்தனர்.

இதையடுத்து, தக்க நேரத்தில், ஹேமந்த் நிம்பால்கர் மற்றும் காரில் இருந்த பாதுகாப்பு போலீசார் கீழே இறங்கி காயமின்றி தப்பிவிட்டனர்.

கார் முழுவதுமாக தீக்கிரையானது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.