ஆன்லைன் விளையாட்டு: சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

இந்தியா சற்றுமுன்
boy
boy

பப்ஜி கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வந்தது. இதற்கு சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் அடிமையாகி வந்தனர்.

இந்த விளையாட்டால் ஒரு சிலர் உயிரிழப்பை கூட சந்தித்தனர். இன்னும் சிலர் பைத்தியமாகவும் அலைந்தனர். இதற்கு காரணம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதே ஆகும். இதையடுத்து பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிரீ பயர் கேம் விளையாடி சுயநினைவை இழந்து பைத்தியமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

pupji
pupji

ஆனாலும் சிகிச்சையின் போதும் கூட அந்த சிறுவன் பிரீ பயர் கேம் விளையாடுவது போல கைகளை வைத்து 24 மணி நேரமும் செய்கிறான்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், இணையவாசிகளும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

game
game

ஒரு சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளிடம் செல்போன்களை கொடுத்துவிட்டு குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும் என்றும், இன்னும் ஒரு சிலர் இது போன்ற பல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.