நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சினிமா சென்னை
Karthik - 2026

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்தபோது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிப்பட்டுள்ளது.

வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது தவறுதலாக கீழே விழுந்ததில் கார்த்திக்கிற்கு காலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்த காலில் மீண்டும் அடிபட்டதால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் ஓய்வெடுத்துவருகிறார்.

கார்த்திக்குக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.