திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயாருக்கு வஸ்திர மரியாதை!

அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா சற்றுமுன்
srirangam
srirangam

திருப்பதி திருமலை கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

இதனை திருமலை தேவஸ்தான நிர்வாக குழு துணைத் தலைவர் திரு ரமேஷ் பாபு தலைமையில் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து , பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Thirupathi
Thirupathi

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் முஸ்லிம் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார்.

இதனை நினைவுகூறும் வகையில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

srirangam thayaruku
srirangam thayaruku

அதன்படி கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.

இதனை திருமலை தேவஸ்தான நிர்வாக குழு துணைத் தலைவர் திரு ரமேஷ் பாபு தலைமையில் எடுத்து வந்து ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து , பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Thirupathi to srirangam
Thirupathi to srirangam

முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

srirangam kovil
srirangam kovil

இதில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பதியில் இருந்து நம்பெருமாளுக்கு 365 நாட்களுக்கான வஸ்திர மரியாதை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.