இதுல பெண்களுக்கு எச்சரிக்கை இருக்கு.. மானைக் கொஞ்சும் சிறுத்தை! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Leopard
Leopard

வேட்டையாடி உணவுகளை உட்கொல்லும் வேட்டை விலங்குகள் அடிக்கடி மற்ற விலங்குகளுடன் நல்ல உறவில் இருப்பது போன்று இருக்கும்

மிகவும் அன்பாக, பாசமாக நடந்து கொள்வது போன்று தோன்றும். அடடே, பாசத்திற்கு இலக்கணம் என்றால் இது தான் என்று நினைத்தால் அது அப்படி இல்லை.

மிகப்பெரிய வேட்டை விலங்குகள் தன்னுடைய இரையை கொல்வதற்கு முன்பு இப்படி நட்பு பாராட்டுமாம்.

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் சிறுத்தை ஒன்று தன்னுடைய அருகில் மான் ஒன்றை அமர வைத்து விளையாடி போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறதே என்று பார்த்தால் மேலே அவர் கேப்சன் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் அடிக்கடி வேட்டை விலங்குகள் இப்படி செய்வது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

32 நொடிகள் கொண்ட இந்த வீடியோவின் முடிவில் இந்த சிறூத்தையிடம் இருந்து அந்த மானைக் காக்க மான் கூட்டங்கள் குழுமிவிட்டன. ஆனால் இறுதியில் என்ன தான் நடந்தது என்பது தெரியவில்லை.

இது போன்று சில மனித விலங்குகள் கூட வேட்டையாட அப்பாவி பெண்களை அன்பு காட்டி ஏமாற்றும் போக்கு நினைவிற்கு வருகிறது.

பெண்களே உங்களின் எல்லா செய்கைகளையும் பாராட்டி, சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, கேட்டதெல்லாம் கிடைக்கிறது என்றால்
உங்கள் மீது அன்பு அம்பாய் பொழிகிறது என்றால் காயத்திற்கு தயாராக வேண்டியது நீங்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

https://twitter.com/TheFigen/status/1463498551955181572

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.