மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி விடுதலை: இந்தியா கண்டனம்

உலகம்

laqvi இஸ்லமாபாத்: மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான  லக்வி விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’ மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கியக்  குற்றவாளி, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் லக்வி  பாகிஸ்தானில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பாகிஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதே வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாகவும் இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகும் ஆப்கானியர் ஒருவரை கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தம்மை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாக அவர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி லக்வி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு தவறிவியதால் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து லக்வி எந்நேரமும் விடுவிக்கப்படலாம். ஆனால் லக்வியை விடுவிக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.