October 5, 2024, 8:21 PM
29.4 C
Chennai

இது ‘இங்கிலாந்தின் மகள்’: நிர்பயா ஆவணப் படத்துக்கு பதிலடி

uk_documentaryபுது தில்லி: தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த விவகாரத்தில், திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளி தினேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து, ஆவணப் படம் ஒன்றை உருவாக்கினார் பிரிட்டிஷ் பெண் லெஸ்லீ உட்வின். இது இந்தியாவில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த ஆவணப் படத்தில் தினேஷ் சிங் கூறிய கருத்துகள், இந்தியாவில் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. எனவே, அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தடையை மீறி, உலக அளவில் அந்த ஆவணப் படத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்பியதுடன், யுடியூப் இணையத்தில் பதிவேற்றி, பலர் அதனைப் பார்க்க வழி செய்தது. இந்நிலையில், இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பி, இந்தியாவை மோசமான வகையில் சித்திரித்த லெஸ்லி உட்வினின் ஆணவத்தை கண்டிக்கும் வகையில், இங்கிலாந்தின் மகள் என்ற ஆவணவப் படத்தை எடுத்துள்ளார் இந்தியர் ஒருவர். இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துக் காட்டும் வகையில், இங்கிலாந்தின் மகள் ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளார். இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள ஹர்வீந்தர் சிங், பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளனர் என்றார். இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்குக் காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்று ஹர்வீந்தர் சிங் குற்றம் சாட்டுகிறார். இந்த ஆவணப் படம் இப்போது பதிலுக்கு பதிலாகக் கூறப்படுகிறது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=twUmDDMX9tU”]

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை சிறப்பு...

பஞ்சாங்கம் அக்.05 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - அக்.05ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்||श्री:||...

டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் ‘டேமேஜ்’தான்!

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா?

வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப்

பஞ்சாங்கம் அக்.04 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம்- கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கம்! முன்பதிவு தொடக்கம்!

இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

ஸ்ரீவி., வடபத்ரசாயி பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலின் பிரமோத்ஸவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மாணவர்களுக்கான ‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’; மதுரை ஆட்சியர் அழைப்பு!

1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.

Related Articles

Popular Categories