health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்வலி, தொண்டை கரகரப்பு, உடல்பருமன், தேவையற்ற ரோமம், மூளை பலம்…!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

பல் வலியா?

கடுக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி வாயில் போட்டுமென்று ஊறும் எச்சிலை வாயில் வைத்திருக்க வலி குறையும்.

தொண்டை கரகரப்பா?

ஒரு துண்டு பனை வெல்லத்தையும் ஓர் உரித்த வெங்காயத்தையும் வாயில் போட்டு மென்று விழுங்க உடனே குணமாகும்.

உடல் பருமனைக் குறைக்க…

காரட், மோர் கலந்த பச்சடியை தினமும் சாப்பிட்டு வர அதிகப் படியான சதை கரையும்.

மூளை தெளிவு பெற…

வெங்காயம், தக்காளி, ஆப்பிள், கடலை, தேங்காய். உருளைக் கிழங்கு. வெண்டைக்காய், பாதாம் பருப்பு போன்றவற்றில் அயோடி னும் மேங்கனீஸ் சத்தும் அதிகம் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்து கொள்ள மூளை தெளிவு பெறும். ஞாபக சக்தி பெருகும்.
வல்லாரை இலைகளை தினமும் சாப்பிட்டு வர மூளை பலப்படும்.

சாதிக்காயோடு இலவங்கம். சாம்பிராணி. வால் மிளகு, இஞ்சி, அக்ரகாரம், இலவங்கப்பட்டை வெற்றிலைக் கொடியின் வேர். தாளிசபத்ரி, தேன் முதலியவை சேர்த்து அல்வாவாகத் தயாரித்து சாப்பிட்டு வந்தால் இருதயம், மூளை நன்கு பலப்படும்.

பூசணிக்காய் சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வர மூளைச் சோர்வு நீங்கி தெளிவு பெறும்.

தேவையற்ற இடங்களில் ரோமமா?

தாளகம் என்ற மருந்துப் பொருளுடன் (அரிதாரம்) கல் சுண்ணாம்பு சேர்த்தரைத்து முடி அதிகமுள்ள இடங்களில் பூசவும். இது நச்சுத் தன்மை வாய்ந்தது. பூசுமிடங்களில் கொப்புளங்களை உண்டாக் கலாம். கவனமாக பூச நல்ல பலன் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.