thnai Amla rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தினையரிசி நெல்லிக்காய் சாதம்

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
thnai Amla rice - 2026

தினையரிசி நெல்லிக்காய் சாதம்
தேவையானபொருட்கள் •
1 கப் தினை அரிசி
5 நெல்லிக்காய்
தேவையான அளவு செக்கு நல்லெண்ணெய்
உப்பு
4 வர மிளகாய்
1/2ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்த பருப்பு
சிறிது பெருங்காயம்
சிறிது கறிவேப்பிலை
சிறிது கொத்தமல்லி

செய்முறை

முதலில் தினையரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு அலசி எடுத்துக்
கொள்ள வேண்டும். • பின் தினையரிசியுடன் நன்கு கப்
தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும். • தண்ணீர் கொதி வந்தபின் அடுப்பை சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம்
வேகவிடவும்.

தினையரிசி நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து மீதமிருக்கும் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
*ஒட்டாமால் தனித்தனியாக உதிரியாக தினையரிசி சாதம் தயார்.

‘சிறிது நல்லெண்ணெய், உப்பு சேர்த்து, கிளறி உதிர் உதிராக சிறிது ஆறவைத்துக் கொள்ளவும். பின் 5 நெல்லிக்காய்களை விதை நீக்கி, 2வர மிளகாய், சிறிது கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.

அடுப்பில் ஒரு மண்சட்டி வைத்து அதில் 1.ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்த பகுப்பு, வர மிளகாய் போட்டு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்,

நன்கு வதங்கியதும் உதிரியாக உள்ள தினை சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவவும்.
சத்தான சுவையான தினையரிசி நெல்லிக்காய் சாதம் தயார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் பள்ளி அலுவலகங்களுக்கு எடுத்து செல்ல அற்புதமான உணவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.