திமுக பிரமுகர் தொழில் நிறுவனங்களில் வருமானவரித்துறை யினர் இன்றும் சோதனை

Published:

தி.மு.க.பிரமுகருக்கு சொந்தமான இடங்களில்
வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில்
வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.

ஆற்காட்டை சேர்ந்தவர் சாரதி(40) ஆனைமல்லுாரில் கல்குவாரி , கட்டிட கான்ட்ராக்டர், சிமென்ட் டீலர் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார் . அ.தி.மு.க., வில் இருந்த இவர் கடந்தாண்டு, தி.மு.க. வில் சேர்ந்தார். இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணி முதல் ஆற்காட்டிலுள்ள சாரதியின் வீடு, அலுவலகம், ஆனைமல்லுார் கல்குவாரி என 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக ஆற்காடு வீடு, அலுவலகம், சென்னை, காஞ்சிபுரம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி  ஆற்காடு வீட்டில் உள்ள சாரதியிடம் விசாரணை நடத்தினர்.

Related articles

Recent articles

spot_img