valimai ajith - 2026

கண்மூடி வலியைப் பொறுக்கும் வலிமை நாயகன்! காயம்பட்ட புகைப்படங்கள் வைரல்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
valimai ajith - 2026

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வலிமை படத்தில் குறிப்பிட்ட பைக் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் அவர் கீழே விழுந்து ரத்தம் சொட்ட சொட்ட காயங்கள் ஏற்பட்டிருப்பது தொடர்புடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

வலிமை படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது சண்டைக் காட்சிகள் தான். இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார்.

தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அஜித். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

valimai 3 - 2026

மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர் அஜித். பட விழாக்கள், புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட கலந்துகொள்ள மாட்டார். இருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு தான் போகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசான படம் வலிமை. எச்.வினோத் இயக்கி இருந்த இப்படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, ராஜு ஐயப்பா, கார்த்திகேயா, புகழ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

ALSO READ:  சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!
ajith 2 - 2026

அஜித்தின் கெரியரில் முதன்முறையாக இது பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது. ஆதலால் 10 நாட்களில் இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

வலிமை படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது சண்டைக் காட்சிகள் தான். இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார்.

valimai 1 - 2026

நடிகர் அஜித் இப்படத்துக்காக ரிஸ்க் எடுத்து பல்வேறு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருந்தார். பைக் சேஸிங் காட்சியில் நடித்தபோது நடிகர் அஜித் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.

ajith2 - 2026

இதுகுறித்து வீடியோவையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள் பதறிப்போயினர்.

இந்நிலையில், தற்போது அந்த விபத்துக்கு பின் நடிகர் அஜித் மருத்துவமனையில் ரத்தக் காயங்களுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

ajith1 - 2026

அஜித் கையில் ஏராளமான் சிராய்ப்புகளும், ரத்தக் காயங்களும் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அவர் கீழே விழுந்ததில் அவருடைய கவச உடை கிழிந்து கிடப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

ALSO READ:  பண்டிகைகளை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? எதிர்பார்ப்பில் பயணிகள்!

இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Posts by Suprasanna Mahadevan: