அட்மின்களுக்கு சிறப்பு அம்சம்.. பேஸ்புக் அப்டேட்!

சற்றுமுன் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
meta - 2026

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் குழு அட்மின்களுக்காகப் புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மெடா நிறுவனத்தின் சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் சமீபத்தில் போலிச் செய்திகளைத் தடுக்கும் விதமாக இந்தப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பம்சங்கள் போலி செய்திகளைக் கண்டறிவதை மட்டுமின்றி, குழு அட்மின்களின் பணியைக் குறைப்பதோடு, தொடர்ந்து பேஸ்புக் குழுக்களைத் திறமையாகக் கையாளவும் இந்த அம்சங்கள் பயன்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சம் அட்மின் அசிஸ்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சத்தின் மூலம் பேஸ்புக் குழுக்களின் தவறான தகவல்களும், போலிச் செய்திகளும் அடங்கிய பதிவுகளைப் பதிவிடும் போது, தானாகவே அவற்றை நீக்கும் அம்சத்தை அட்மின்களுக்கு வழங்குகிறது. அட்மின் அசிஸ்ட்’.

மேலும், பேஸ்புக் குழுக்களில் கொடுக்கப்பட்டிருந்த மியூட்’ என்ற ஆப்ஷன் தற்போது நீக்கப்பட்டு, சஸ்பெண்ட்’ என்று மாற்றப்பட்டிருப்பதன் மூலம், குழு உரையாடல்களில் ஒருவரை மியூட் செய்வது மட்டுமின்றி தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யவும் பயன்படுகிறது.

இது போஸ்ட் செய்வது, ரியாக்ட் செய்வது, கமெண்ட் செய்வது, குழுவில் ரூம்களை உருவாக்குவது, ரூம்களுக்குள் நுழைவது முதலான அனைத்தில் இருந்து தற்காலிகமாக நீங்க வைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.