sumaladha - 2026

பணி புரிந்து கொண்டிருந்த பெண் ஊழியர்..! தீடிரென தீப்பிடித்த லேப்டாப்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
sumaladha - 2026

கொரோனா காரணமாக ஆந்திராவில் வீட்டில் இருந்தே பணியாற்றிய இளம் பெண் ஒருவரின் லேப்டாப் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

ஒய்எஸ்ஆர் மாவட்டம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்த சுமலதா, பெங்களுருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணியாற்றி வரும் அவர், லேப்டாப்பில் 10% கீழ் சார்ஜ் இறங்கியதால் சார்ஜரை இணைத்து வேலை செய்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்பு சூடான லேப் டாப், உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சுமலதா மீது மின்சாரம் பாய்ந்ததில் 50% தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.