husband wife - 2026

கணவன் Vs மனைவி: என்னதான் சண்டைனாலும் சுவரெல்லாமா கட்டுவாங்க..🙄!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
husband wife - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் கணவன் மனைவிக்கு இடையிலான சண்டை, கேலி, கிண்டல், காதல், பாசம் தொடர்பான வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் வயிறு குலுங்க சிரிப்பதோடு ஆச்சரியமும் அடைகிறார்கள். இந்த வீடியோ ஒரு கணவன் மனைவியின் சண்டையின் வீடியோவாகும்.

இந்த வீடியோ மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஒரு கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது என்பதை வீடியோவை பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த சண்டையின் காரணமாக, மனைவி செய்த காரியம் அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வீடியோவைப் பார்ப்பவர்களால் கண்டிப்பாக சிரிப்பை நிறுத்த முடியாது. தனக்கும் தனது கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு, மனைவி படுக்கையில் ஒரு செங்கல் சுவரை எழுப்புகிறார்.

இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. வீடியோவில் கணவர் பயமும் கடுப்புமாக எதுவும் பேசாமல் இருப்பதையும் காண முடிகின்றது. மனைவியோ சுவர் எழுப்புவதிலேயே குறியாய் இருக்கிறார்.

கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் கோபமாக இருப்பதை வீடியோ-வில் காணலாம். கணவன் அமைதியாக அமர்ந்திருக்கிறார், மனைவி தனக்கும் கணவனுக்கும் இடையில் செங்கல் சுவர் எழுப்புவதில் மும்முரமாய் உள்ளார். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மனைவி உண்மையில் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு வலுவான சுவரைக் கட்டுகிறார்.

மனைவியின் செயலால் கணவன் எரிச்சலடைந்தாலும், பயம் காரணமாக எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். வீடியோவை பார்த்தால், கணவன் மீது அதிக கோபம் கொண்ட மனைவி இருவருக்கும் நடுவில் சுவர் எழுப்ப முடிவு செய்திருப்பது தெரிகிறது.

இந்த வேடிக்கையான வீடியோ rising.teching என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல்வேறு விதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், ‘சுவர் கட்டுவதற்குப் பதிலாக, பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதே நேரத்தில், மற்றொரு பயனர், ‘கணவன் மனைவி சண்டைக்கு நவீன தீர்வு’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.