images 90 - 2026

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..

சற்றுமுன்

ஒரே நாளில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட சிபிஎஸ்இ.இன்று காலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிற்பகல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முதல் முறையாக, ஒரே நாளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத் தேர்வுகளாக நடத்தியிருந்தது  சிபிஎஸ்இ நிர்வாகம். இந்த நிலையில், இன்று காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளையும் பிற்பகல் 2 மணியளவில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் வெளியிட்டது.

மொத்தம் 100 மதிப்பெண் கொண்ட ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற மாணவர்கள் 33% மதிப்பெண் பெற வேண்டியது அவசியம். மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 94.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே வேளையில் 95.21% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இன்று பிற்பகல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்
தேர்வு முடிவுகளை http://cbse.results.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்.நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி.20,93,978 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

images 90 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.