ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்

Published:

தமிழகம் முழுவதும் பல ஆவின் நிறுவனங்களுக்கு சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு டேங்கர் லாரிகள் பால் சப்ளை செய்கின்றன. இவற்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 26 ரூபாய் வீதம் வாடகை வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வாடகை உயர்த்தப்படாததை கண்டித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆவின் அதிகாரிகள், 5 நாட்கள் அவகாசம் கேட்டதை அடுத்து வேலை நிறுத்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 20 ம் தேதிக்குள் வாடகையை உயர்த்தி தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், இதனால், 40 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img