
திருச்சி அருகே காதலித்து பழகிவந்த பெண்ணை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டியதோடு , பெண்ணின் தாய், தங்கை ஆகியோரின் ஆபாச படமும் எடுத்து தர சொல்லி கேட்டு மிரட்டிய காதலன் போலீசில் சிக்கியுள்ளான்.
3 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஆபாச காதலனை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த பகீர் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்தவர் பெண். இவர் தனது குடும்ப நண்பரான எழில் நகரைசேர்ந்த சதீஷ் என்பவருடன் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியுள்ளனர்
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்ப்பதற்காக அந்தபெண் சென்றுள்ளார். இதேபோல் சதீஷ்குமாரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகி உள்ளார் சதீஷ் குமார்.
இருவரும் வெளியூரில்தானே இருக்கிறோம். யாருக்கு தெரியப்போகிறது என நினைத்து, லிவ்விங் டு கெதரில் வாழ முடிவு செய்துள்ளனர். எனவே, ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தியுள்ளனர். அந்தரங்க உறவை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் சதீஷ்குமார்.
அந்த பெண்ணுடனான வாழ்க்கை சலிக்க தொடங்கியது சதீஷுக்கு. அதனால், வேறு ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும் அதே பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், கூறியுள்ளார் சதீஷ்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் அழுது நியாயம் கேட்டு உள்ளார். ஆனால் செல்போனில் எடுத்த வீடியோவை காட்டிய சதீஷ், இது வெளியே போகாமல் இருக்க வேண்டும் என்றால், என் வழியில் குறுக்கே வராதே என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண், சதீஷ் வேறு பெண்ணை திருமணம் செய்யவதைக் குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்காமல், வேறு வழியின்றி மௌனித்துள்ளார் .
கடந்த 2020ஆம் ஆண்டு சதீஷுக்கும், அவர் காதலித்த வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சதீஷ் தனக்கு திருமணம் ஆன பிறகு சிறிது நாட்கள் கழித்து மீண்டும் பழைய காதலியான இந்த பெண்ணிடம் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார்.
என்னோடு மறுபடியும் உறவு கொள்ளாவிட்டால் உன்னுடன் இருக்கும் நெருக்கமான வீடியோவை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அத்தோடு விடவில்லை சதீஷ். இந்த பெண்ணின் பயத்தை பயன்படுத்திக் கொண்டு என்ன சொன்னாலும் செய்வார் என்பதை புரிந்து வைத்திருந்ததால் உன்னோட நிர்வாண படம் என்கிட்ட இருக்கு, எனக்கு உங்க அம்மா படம் பார்க்க ஆசை. அதை செல்போனில் வீடியோ எடுத்து அனுப்பு என மிரட்டியுள்ளார்.
பயந்து போன அந்த பெண், தனது தாய் குளிக்கும் இடத்தில் செல்போனை மறைத்து வைத்தும், ஆடை மாற்றும் இடத்தில் செல்போனை வைத்தும், வீடியோ எடுத்து, அதை காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதை பார்த்து ரசித்த சதீஷ், அந்த பெண்ணின் தங்கை வீடியோவையும் கேட்டுள்ளார். இதையும் அனுப்பி வைத்துள்ளார் அந்த பெண்.
ஒரு கட்டத்தில், இந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த, அவரது குடும்பத்தார். விசாரித்தபோது அழுதபடியே எல்லாவற்றையும் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணை அழைத்துச் சென்று புகார் செய்ய வைத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சதீஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரின் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் சதீஷ் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 2 பிரிவுகளிலும், கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒரு பிரிவிலும் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
திருமண ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பழகி, அந்த பெண்ணின் அம்மா ஆபாச படத்தையும் கூட எடுத்து வைத்து மிரட்டிய காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.