images 12 1 - 2026

ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கு மே2 க்கு ஒத்திவைப்பு..

சற்றுமுன்
images 12 1 - 2026
ராகுல்காந்தி

2 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, குஜராத் மாநிலம், சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, எம்.பி. பதவியை இழந்த ராகுல், கீழமை நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக சூரத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த இத்தீா்ப்புக்கு தடை விதிக்க அவா் கோரியிருந்தாா். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த மாவட்ட அமா்வு நீதிமன்றம், தீா்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடா்ந்து, மாநில உயா்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது ராகுல் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் விசாரணையை அம்மாநில உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, பெண் நீதிபதி கீதா கோபி முன் ராகுலின் மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக அவா் தெரிவித்தாா். இதையடுத்து, புதிய நீதிபதி முன் ராகுலின் மனு பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.